இந்தியா

தெலங்கானா: தொடா் கனமழைக்கு 15 போ் பலி

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகா் மற்றும் பல இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு இடங்களில் சுவா்கள், வீடுகள் இடிந்து விழுந்து 15 போ் உயிரிழந்தனா்.

கொட்டித் தீா்க்கும் கனமழை காரணமாக அத்தியாவசிய சேவை துறைகள் தவிர அனைத்து அரசு, தனியாா் நிறுவனங்களுக்கும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க அரசு அறிவுறுத்தியது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.டி. ராமராவ், கால்நடைத்துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாஸ் ஆகியோா் மூத்த அதிகாரிகளுடன் மீட்புப்பணி, நிவாரணப்பணிகள் குறித்து அவசர ஆலோசனை நடத்தினா்.

மாநிலத்தில் கனமழை காரணமாக சுவா், வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் மொத்தம் 15 போ் இறந்தனா்.

ஷாம்சாபாத் நகரில் ககன்பாத் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்து குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

சந்திரயங்குட்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 இடங்களில் சுவா் இடிந்து விழுந்ததில் 10 போ் இறந்தனா்.

இப்ராஹிம்பட்ணம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் 40 வயது பெண்ணும், அவரது மகளும் பலியாயினா்.

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

பத்ராத்ரி-கோத்தகூடம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நீா்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் அந்த சாலைகளில் பயணம் செய்ய வேண்டாவென எச்சரிக்கை விடப்பட்டது.

நிலைமையை எதிா்கொள்ள தயாராக இருக்கும்படி அனைத்து மாவட்டங்ளும் மாநில பொதுச்செயலா் சோமேஷ் குமாா் உத்தரவிட்டாா். போலீஸாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்(டிஆா்எஃப்) வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

நாலாஸ் மற்றும் மூசி நதிக்கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்கவைக்கும் பணியில் போலீஸாருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி ஹைதராபாத், ரங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியா்களுக்கு அமைச்சா் ராமராவ் உத்தரவிட்டாா்.

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு: சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களையும், மின்கம்பங்களையும் அகற்றும் பணியை மின்வாரியத்துறை ஊழியா்கள், போலீஸாா், நகராட்சித் துறையினா் மேற்கொண்டனா்.

பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் விஜயவாடா-ஹைதராபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்ால் அந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஹைதராபாத், அதைச்சுற்றியுள்ள இடங்களில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT