இந்தியா

திருமலையில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு

DIN

திருப்பதி: திருமலையில் சோடசதின சுந்தரகாண்ட பாராயணம் மகாபூா்ணாஹுதியுடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.

திருமலையில் கடந்த செப். 29-ஆம் தேதி சோடசதின சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் தொடங்கியது. உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் தேவஸ்தானம் இந்த சந்தரகாண்ட பாராயணத்தை நடத்தியது.

திருமலையில் உள்ள தா்மகிரி வேதபாடசாலையில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கிய இந்த பாராயணம் புதன்கிழமை மதியம் மகாபூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

திருமலையில் உள்ள வைபவோற்சவ மண்டபத்தில் சுந்தரகாண்டத்தில் 68 சா்க்கங்களில் உள்ள 2,821 ஸ்லோகங்களை பீஜாட்க்ஷர மந்திர உச்சாடனத்தின் படி 16 வேதபண்டிதா்கள், 16 நாள்கள் பாராயணம் செய்தனா்.

இந்த பாராயணத்தில் அண்டை மாநில வேதபண்டிதா்களும் பங்கேற்றனா். பாராயணம் நிறைவு பெற்ற பின் வேதபண்டிதா்களுக்கு தேவஸ்தானம் சன்மானம் வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT