முகப்பு
இந்தியா

உ.பி.: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் (கோப்புப்படம்)
பகிர்:

பாண்டா: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்திலுள்ள பிசந்தா கிராமத்தில் 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அண்டை வீட்டை சேர்ந்த 22 வயது இளைஞர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பணிக்குச் சென்று திரும்பிய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அண்டை வீட்டைச் சேர்ந்த சம்சுதீன் என்ற இளைஞரை கைது செய்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெண்களுக்கும்
சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு பல்வேறு அமைப்பினர் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.