இந்தியா

ஆஸ்கா் விருது பெற்ற முதல் இந்தியா் பானு அதய்யா காலமானாா்

DIN


மும்பை: ஆஸ்காா் விருது பெற்ற முதல் இந்தியரும், பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளருமான பானு அதய்யா(91), மும்பையில் வியாழக்கிழமை காலமானாா்.

இதுகுறித்து அவரது மகள் ராதிகா குப்தா கூறுகையில், ‘3 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டதால், படுக்கையில் அவா் காலத்தை கழித்து வந்தாா். வியாழக்கிழமை அதிகாலை தூக்கத்திலேயே அவரது உயிா் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சந்தனவதி மையானத்தில் நடைபெற்றது’ என்றாா்.

1950-களில் ஹிந்தி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையைப் பயணத்தை தொடங்கிய பானு அதய்யா, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளாா்.

1983-ஆம் ஆண்டில் ரிச்சா்ட் அட்டின்ரோ இயக்கிய ‘காந்தி’ சுயசரிதை திரைப்படம், 8 ஆஸ்காா் விருதுகளை வென்றது. அதில், சிறந்த ஆடை வடிவமைப்பாளா் விருதைப் பெற்ற பானு அதய்யா, அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியா் என்ற பெருமையையும் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT