இந்தியா

பிகார் பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

DIN


பிகார் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று (வியாழன்கிழமை) வெளியிட்டது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் ஏற்கெனவே 21 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை  காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை 49 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

மேலும் வால்மீகி நகர் மக்களவை உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பிரவேஷ் குமார் மிஸ்ராவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT