இந்தியா

கரோனா தீவிரமாகும் 5 மாநிலங்களுக்கு மத்திய உயர்நிலைக் குழுக்கள்

DIN


நாட்டில் கரோனா தீவிரமாகும் கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயல்பட இந்தக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மத்திய அரசு தரப்பில் அனுப்பி வைக்கப்படும் இந்த உயர்நிலைக் குழு, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்தல், கரோனா பரிசோதனை, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துதல், கரோனா பாதித்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உதவி செய்யும்.

உரிய நேரத்தில் கரோனா பாதித்தவர்களைக் கண்டறிவது மற்றும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவற்கான வழிமுறைகளை செயல்படுத்த மத்திய உயர்நிலைக் குழுவினர் முக்கிய வழிகாட்டுதல்களையும் அளிப்பார்கள் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு இணை செயலாளர் (அந்தந்த மாநிலத்துக்கான தொடர்பு அதிகாரி), பொது சுகாதார விஷயங்களை கவனித்துக் கொள்ள ஒரு பொது சுகாதார நிபுணர், தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், மாநிலத்தின் மருத்துவ மேலாண்மையையை கவனிக்கவும் ஒரு மருத்துவர் ஆகியோர் இருப்பார்கள்.

சரியான நேரத்தில் நோய் தொற்றை கண்டறிதல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மத்திய குழுக்கள் மாநிலங்களுக்கு உதவுவார்கள்.

நாட்டின் மொத்த பாதிப்புகளில் 4.3 சதவீதம் கேரளாவில் உள்ளன. கர்நாடாகவில் 10.1 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 4.2 சதவீதமும், ராஜஸ்தானில் 2.3 சதவீதமும், சத்தீஸ்கரில் 2.1 சதவீதமும் உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT