இந்தியா

100 நாள் வேலை அட்டையில் தீபிகா படுகோன்: ம.பி.யில் நூதன முறையில் மோசடி

DIN

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் அடையாள அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்காமலேயே அதிகாரிகள் போலியான அடையாள அட்டைகளை உருவாக்கி அதிகாரிகள் முறைக்கேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிர்னியா மாவட்டத்தில் பிப்பர்கெடா நாகா கிராமத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் புகைப்படங்கள் அடங்கிய போலி அடையாள அட்டைகளை உருவாக்கி மத்திய அரசின் நிதியை முறைக்கேடாகப் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

சோனு சதிலால் என்ற பெயரில் உள்ள ஒரு வேலை அட்டையில், திரைப்பட நடிகை தீபிகா படுகோனின் படமும், சோனு என்ற மற்றொரு வேலை அட்டையில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் படம் இருந்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT