முகப்பு
இந்தியா

ஜார்கண்டில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று: 8 பேர் பலி

ஜார்கண்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 583 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
J'khand reports 583 new COVID-19 cases, 8 more deaths
பகிர்:

ஜார்கண்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 583 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்லது.

இது குறித்து ஜார்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி ஜார்கண்டில் புதிதாக 583 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  94,952-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,890-ஆக உள்ளது. கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 87,240 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 24 மணிநேரத்தில் 23,399 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  கரோனாவால் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 820-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.