முகப்பு
இந்தியா

பிகார் தேர்தல்: லோக் ஜனசக்தியின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
பிகார் தேர்தல்: லோக் ஜனசக்தியின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
பகிர்:

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கு கடந்த 8-ஆம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி சார்பில் 42 முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து 2-வது கட்டமாக நவம்பர் 3-ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 26 வேட்பாளர்களை தற்போது லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →