முகப்பு
இந்தியா

பிகார் அமைச்சர் கபில்தேவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிகார் அமைச்சர் கபில் தேவ் காமத் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
Modi condoles death of Bihar minister
பகிர்:

பிகார் அமைச்சர் கபில் தேவ் காமத் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக பிரதமா் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், 

அமைச்சர் கபில் தேவ் காமத் இறப்புச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஏழை மக்களுக்காகப் பாடுபட்டவர் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் என்று தெரிவித்தார். 

காமத் பாட்னாவின் எய்ம்ஸில் வெள்ளிக்கிழமை அதிகாலை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

கபில் தேவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். 

மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.