முகப்பு
இந்தியா

பாஜக அரசின் மற்றுமொரு சாதனை: ராகுல் காந்தி ட்வீட்

இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த பன்னாட்டு நிதியத்தின் ஒப்பீடு வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 

பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளன’ என்று பதிவிட்டுள்ளார். 

இதில், இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3% வீழ்ச்சியடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →