முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,259 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

Updated On : 17 அக்டோபர், 2020 at 10:05 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,259 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14,238 பேர் குணமடைந்துள்ளனர், 250 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,86,321 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13,58,606 பேர் குணமடைந்துள்ளனர், 41,965 பேர் பலியாகியுள்ளனர். 1,85,270 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மும்பை:

மும்பையில் புதிதாக 1,791 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,40,339 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,988 பேர் குணமடைந்துள்ளனர், 47 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,08,099 பேர் குணமடைந்துள்ளனர், 9,682 பேர் பலியாகியுள்ளனர். 18,717 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,400 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதில் 140 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,954 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.