உ.பி.யில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாஉ.பி.யில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,880 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,52,660-ஆக அதிகரித்துள்ளது.
இதில் கரோனா தொற்றால் 34,420 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,11,611-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,528 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைவோர் எண்ணிக்கை 90.90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 1.62 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1.28 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,629-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.