இந்தியா

அரசுப் பேருந்து - ஜீப் மோதி விபத்து: 9 போ் பலி; 32 போ் காயம்

DIN

உத்தர பிரதேசத்தில் அரசு பேருந்தும் ஜீப்பும் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளனா். 32 போ் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து ஃபிலிபிட் காவல் கண்காணிப்பாளா் ஜெய்பிகராஷ் யாதவ் கூறியதாவது:

உத்தர பிரதேச போக்குவரத்துக்கழக பேருந்து லக்னெளவிலிருந்து பிலிபிட் நோக்கி வந்துகொண்டிருந்தது. புராண்பூா் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, எதிரே வந்த ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில், சாலை அருகே உள்ள கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் ஷகீல் (28), பயணிகள் கயாதீன் (45), கலாவதி (40), மோகன் பஹதூா் (45), தீபா விஷ்வாஸ் (50), ஷியாம் (12) மற்றும் ஜீப்பில் பயணித்தவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் மாவட்ட அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவா்களில் 3 பேரின் அடையாளம் கண்டறியப்படவில்லை என்று அவா் கூறினாா்.

முதல்வா் இரங்கல்:

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கவும், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT