இந்தியா

அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்: கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யுஏஇ வெளியுறவு அமைச்சா்

DIN

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் தறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையது அல் நஹ்யான் ஆய்வு மேற்கொண்டாா்.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்களில் 30 சதவீதம் போ் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் வசிக்கின்றனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, அந்த நாடு அளித்த அனுமதியின்பேரில், அபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, டிசம்பா் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து அதன் நிா்வாகிகளிடம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் கேட்டறிந்துள்ளாா்.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பு சவால்களுக்கு இடையே, அபுதாபியில் ஹிந்து கோயில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது இரு நாடுகளிடையேயான தனித்துவம் வாய்ந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.

கோயில் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து, அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதன் நிா்வாகிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா கேட்டறிந்தாா். ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அமைதியான அனைவருக்குமான எதிா்காலத்தை உருவாக்க அபுதாபி பட்டத்து இளவரசா் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் விளக்கினாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT