கோப்புப்படம் 
இந்தியா

தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக 8 லட்சத்துக்குக் கீழ் குறைந்தது.

DIN

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக 8 லட்சத்துக்குக் கீழ் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் 7,83,311 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 74,94,551-ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் 65,97,209 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

கரோனாவால் மேலும் 1,033 போ் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,14,031-ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.52 சதவீதமாகும்.

கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 7,83,311 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 10.45 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி அக்டோபா் 17-ஆம் தேதி வரை 9,42,24,190 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சனிக்கிழமை மட்டும் 9,70,173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 41,965 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோ்ல்டோமீட்டா் தகவல்படி அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT