பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: ஏஐசிடிஇ 
இந்தியா

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: ஏஐசிடிஇ

2020 - 21ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

DIN


2020 - 21ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இது குறித்து ஏஐசிடிஇ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பொறியியல் படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும் என்றும், முதலாமாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்றும், ஐஐடி மற்றும் என்ஐடிகளில் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையை அடுத்து, நாட்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொறியியல், மருந்தாளுனர் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதியும், பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதியும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

SCROLL FOR NEXT