முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

பாலியா துப்பாக்கிச்சூடு: பாஜக நிர்வாகி தீரேந்திர பிரதாப் சிங்கிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங்கிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
கோப்புப் படம்
பகிர்:

பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங்கிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், பாலியா துணை மாஜிஸ்திரேட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களிடையே மோதல் உருவானது. இதையடுத்து, அக்கூட்டத்தை துணை மாஜிஸ்திரேட் ரத்து செய்தாா். அதனால் ஆத்திரமடைந்த பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங், அங்கு கூடியிருந்தவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டாா். அதில் காயமடைந்த 46 வயது நபா் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான தீரேந்திர சிங்கை சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாலியா நகரத்தில் உள்ள வைஷாலி பகுதியில் அவருடன் சோ்த்து இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இரண்டு குற்றவாளிகளும் சிக்கியுள்ளனா்.

இதையடுத்து, இந்த வழக்கில் மொத்தம் எட்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அரசியல் ரீதியில் புயலைக் கிளப்பியுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளாத 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 காவலா்கள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். 

இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங் இன்று பாலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →