இந்தியா

கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் எடியூரப்பா

DIN

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் எடியூரப்பா புதன்கிழமை வான்வழியாகப் பார்வையிட்டார்.

கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலபுராகி மாவட்டத்தில் வான்வழியாக முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டார். 

கலபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளால் பெரும்சேதத்தை சந்தித்துள்ளன. இப்பகுதிகளில் ரூ.3000 கோடி அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இடைத்தேர்தலில் மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி ஸ்ரீமதி மரணம்: விசாரணைக்கு பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

கர்நாடகத்தில் உள்கட்சி பிளவு இல்லை: சித்தராமையா

டாப் 4-குள் நுழையுமா லக்னோ?

SCROLL FOR NEXT