தில்லியில் மேலும் 3,686 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,686 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,686 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 3,686 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,40,436 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 47 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 6,128 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 3,444 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 3,10,191 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 24,117 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.