முகப்பு
இந்தியா

குஜராத்: திருமணம் செய்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருமணம் செய்வதாகக் கூறி குஜராத்தில் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் வன்கொடுமை அளித்து வந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
குஜராத்: திருமணம் செய்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
பகிர்:

திருமணம் செய்வதாகக் கூறி குஜராத்தில் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் வன்கொடுமை அளித்து வந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் உதனா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியிடம் இளைஞர் ஆசைவார்த்தைக் கூறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இதனை சிறுமி தமது வீட்டில் மறைத்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை மருத்துவமனையில் குழந்தையை ஈன்றுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.