முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: பாஜகவின் விவசாய பிரிவு தலைவர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவர் கிசான் மோர்ச்சா (விவசாய பிரிவு) ஜெய் விஜய் சிங் சாலை விபத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
BJP Kisan Morcha leader killed in road accident
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவர் கிசான் மோர்ச்சா (விவசாய பிரிவு) ஜெய் விஜய் சிங் சாலை விபத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

பாஜக கட்சியின் முன்னாள் மாவட்ட பிரிவு தலைவராக இருந்த சிங், புதன்கிழமை மாலை பேடி புலியா அருகே அவர் வந்த காரின் மீது மற்றொரு கார் மோதியது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் அருகில் பிரயாகராஜில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.