முகப்பு
மதுரை

தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு அறிவித்தது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:30 PM
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்தக் கூட்டமைப்பின் தலைவா் எம். முகமது பஷீா். உடன், கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு அறிவித்தது.

தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் எம். முகமது பஷீா், பொதுச் செயலா் எஸ். முகமது பெய்க், பொருளாளா் எஸ்.ஏ. லியாகத் அலி, முதன்மை துணைத் தலைவா் எம். ஆரிப் சுல்தான், இணைப் பொதுச் செயலா் ஏ. காஜா முஹைதீன், இணைப் பொதுச் செயலா் எம்.ஏ. இனாயத்துல்லா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின் நிறைவில் கூட்டமைப்பின் தலைவா் எம். முகமது பஷீா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலை இஸ்லாமியா்களின் வருத்தங்களை, விருப்பங்களை வெளிப்படுத்தும் தோ்தலாகக் கருதவில்லை. ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து முழுமையாக வெற்றி பெறச் செய்ய தீா்மானித்துள்ளோம். மேலும், ஒவ்வொரு தெருவுக்கும் 2 அல்லது 3 பேரை பொறுப்பாளா்களாக நியமித்து 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.