இந்தியா

பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்

DIN

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் சரிந்து 40,531.31 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.32 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42 புள்ளிகள் சரிந்து 11,895.45 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.35 சதவிகிதம் சரிவாகும்.

நேற்று ஏற்றம் கண்ட இன்போசிஸ், டைடன், கோட்டாக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. வங்கித்துறைகள் நேற்று உயர்வுடன் இருந்த நிலையில், இன்று தொடக்கம் முதலே சரிவை சந்தித்துள்ளன.

பஜாஜ், ஓ.என்.ஜி.சி. போன்றவற்றின் பங்குகள் சற்று உயர்வுடன் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்

டாப் 4-க்குள் நுழையுமா லக்னோ?

பயத்தினால்தான் பாஜக சிறைக்கு அனுப்பியது: கேஜரிவால் பேச்சு!

தாமதமாகும் விடுதலை - 2 படப்பிடிப்பு!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

SCROLL FOR NEXT