'எனது தந்தை இல்லாமல் முதன்முறையாகத் தேர்தலை சந்திக்கிறேன்'
எனது தந்தை இல்லாமல் முதல் தேர்தலை சந்திப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட முயற்சிப்பதாகவும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
எனது தந்தை இல்லாமல் முதல் தேர்தலை சந்திப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட முயற்சிப்பதாகவும் லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கயாவில் உள்ள அட்ரி சட்டமன்றத் தொகுதியை நேற்று (புதன்கிழமை) இரவு சிராக் பாஸ்வான் பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர், தமது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் இல்லாமல் தாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தனித்து காணப்படுகிறேன். ஆனாலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன் என்று கூறினார்.
என்னால் முடிந்த அளவு பயணம் செய்கிறேன். செல்ல முடிந்த தூரம் நேரடியாகச் சென்று மக்களை சந்திக்கிறேன். லோக் ஜனசக்தி தொண்டர்களின் பணியால் மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது. இதற்காக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பிகாருக்கு முன்னுரிமை, பிகாரிகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை முன்வைத்து தேர்தலில் கடுமையாக உழைத்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு ஆகஸ்ட் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.