இந்தியா

10 கோடி கரோனா பரிசோதனைகளைக் கடந்து இந்தியா சாதனை

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கரோனா பரிசோதனை அதிகவேகமாக அதிகரித்து வருகிறது. இன்று மொத்த பரிசோதனை 10 கோடி இலக்கைக்  (10,01,13,085) கடந்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

மற்றொரு சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில், 14,42,722 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சுமார் 2000 பரிசோதனைக் கூடங்கள் உள்ளதால், நாட்டின் பரிசோதனை திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் உள்ள 1989 பரிசோதனைக் கூடங்களில் 1122 அரசு பரிசோதனைக் கூடங்களும் 867 தனியார் பரிசோதனை கூடங்களும் உள்ளன.

அதிகளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர பரிசோதனை மூலம், பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு வீதமும் குறைந்துள்ளது. கடைசி ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 9 நாட்களில் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT