இந்தியா

பெங்களூருவில் கனமழை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 நிவாரணம்

DIN

பெங்களூருவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் பல்வேறு இல்லங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தால் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை இழந்த குடும்பத்தினருக்கு ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியுரப்பா கூறினார்.

இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். கனமழையால் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளைப் போன்று மீண்டும் ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT