முகப்பு
இந்தியா

அக்.27ல் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம்: எல்.முருகன்

திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
பகிர்:

திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள்இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது, 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்.

திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெறும்.

அதேபோன்று தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும். யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →