இந்தியா

கரோனா: மிசோரத்தில் மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு

DIN

மிசோரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக பள்ளிகளை மீண்டும் மூட மிசோரம் அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மிசோரம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 15 பள்ளி மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மிசோரத்தில் கரோனா தொற்று பரவலை கணக்கில் கொண்டு கடந்த 16-ஆம் தேதி 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 

இதன் எதிரொலியாக 15 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மிசோரத்தில் பள்ளிகளை மீண்டும் மூட அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா தொற்று பரவல் பள்ளி மாணவர்களிடையேயும் அதிகரிப்பதால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொற்றுநோய் நிலைமை மேம்பட்டு, உள்ளூரில் தொற்று பரவல் அதிகரிப்பது குறைந்தால், பள்ளிகள் மற்றும் விடுதிகள் நவம்பர் 9-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டுக்கான இறுதிப் பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

Related Article

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT