முகப்பு
இந்தியா

கேரளத்தில் 4 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,457 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,457 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 5,457 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 402,675 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 3,09,032 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 92,161 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →