இந்தியா

“தெருவோர வியாபாரிகளுக்குத் தேவை நிவாரண உதவி, கடன் அல்ல”: பிரியங்கா காந்தி

DIN

தெருவோர விற்பனையாளர்களுக்கு நிவாரண உதவி தான் தேவையே அன்றி கடனுதவி அல்ல என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட  தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில்,  உ.பி.யின் சில தெருவோர விற்பனையாளர்களுடன் பிரதமர் பேசுகிறார். முழு பொதுமுடக்கத்தில், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் சிறிய கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இன்று, தெருவோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகுப்பு தேவை, கடன் அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT