குஜராத் இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்துகள் எவ்வளவு?
குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் லட்சாதிபதிகள் என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் லட்சாதிபதிகள் என்பது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து அப்தாசா, லிம்ப்டி, மோர்பி, தாரி, கடதா, கர்ஜன், டாங் மற்றும் கப்ராடா ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிரமாணப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 8 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ 4.38 கோடியும், 8 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.52 கோடியும், பாரதிய பழங்குடியினர் கட்சியின் 2 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17.88 லட்சமும் உள்ளது.
53 சுயேட்சை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.70.52 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வேட்பாளர்களில் 61 சதவீதம் வேட்பாளர்கள் தங்கள் கல்வித் தகுதியை 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறிப்பிட்டுள்ளனர். 25 சதவீதம் வேட்பாளர்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மூன்று (4%) பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.