மகாராஷ்டிரத்தில் மீண்டும் பணிக்குத் திரும்பிய வெங்காய வியாபாரிகள்
வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்வதற்கான மத்திய அரசின் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர வெங்காய வியாபாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்வதற்கான மத்திய அரசின் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர வெங்காய வியாபாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான காரீஃப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டதால் விளைச்சல் குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை அதிரித்தது.
மேலும் கடந்த 10 நாட்களாக வெங்காய விலை உயர்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்காயங்களை இருப்பு வைத்துக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மகாராஷ்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்த வெங்காய வியாபார மண்டியினர் கடந்த 4 நாட்களாக தங்களது கடைகளை அடைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் வெங்காய வியாபாரிகள் தங்களது பணிக்குத் திரும்பினர்.