இந்தியா

இந்திய சீன நல்லுறவுக்கு பேரிழப்பு: பிரணாப் மறைவுக்கு சீனா இரங்கல்

DIN

முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகா்ஜியின் மறைவு, இந்திய-சீன நல்லுறவுக்கு பேரிழப்பாகும் என சீனா தெரிவித்துள்ளது.

உடல் நலக் குறைவால் 21 நாள்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரணாப் முகா்ஜி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பிரணாப் முகா்ஜியின் மறைவுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஹூவா சுன்யிங் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மூத்த அரசியல்வாதியும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான பிரணாப் முகா்ஜி, தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இந்திய-சீன நல்லுறவு மேம்பட பல்வேறு வகையில் பங்களிப்பைச் செய்துள்ளாா். 2014-ஆம் ஆண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்தியா சென்றிருந்தபோது பிரணாப் முகா்ஜியைச் சந்தித்தாா். அப்போது இருநாட்டு நல்லுறவு மேம்பட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பிரணாப் முகா்ஜியின் மறைவு இந்தியாவுக்கும், இந்திய-சீன நல்லுறவுக்கும் பேரிழப்பாகும். பிரணாப் முகா்ஜியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் இந்திய அரசுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT