கோப்புப்படம் 
இந்தியா

இந்திய வானியலாளர்கள் கண்டறிந்த தொலைதூரப் பால்வெளி: நாசா பாராட்டு

பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளி மண்டலத்தைக் கண்டுடித்து இந்திய வானவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

DIN

பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளி மண்டலத்தைக் கண்டுடித்து இந்திய வானவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வானியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக கோள்களின் நிலை, நட்சத்திரங்கள் அமைவு குறித்து உலக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புணே வானியல் ஆய்வு நிறுவனத்தின் டாக்டர் கனக் சஹா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளியைக் கண்டறிந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட ஆஸ்ட்ரோசாட் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது.

”இந்திய விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம், ஒளி எப்படி உருவானது போன்ற கேள்விகளுக்கு விடை காண  உதவும்.” என அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

நிதியுதவி கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

SCROLL FOR NEXT