பப்ஜி (கோப்புப்படம்) 
இந்தியா

இந்தியாவில் பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்குத் தடை!

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

DIN

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும். 

இதையும் படிக்கலாமே... அடிமையாக்கும் விளையாட்டு 

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT