முகப்பு
இந்தியா

கனமழை: பெங்களூருவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 6:30 PM
கனமழை: பெங்களூருவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை
பகிர்:

கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கேரளம், கர்நாடகம் போன்ற தென்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

அந்தவகையில் கர்நாடகத்தின் பெங்களூரு உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.