செப். 26-ல் ஐ.நா. பொது அவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
ஐக்கிய நாடுகள் பொது அவையில் செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்தியாசெப். 26-ல் ஐ.நா. பொது அவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
ஐக்கிய நாடுகள் பொது அவையில் செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
ஐ.நா.: ஐக்கிய நாடுகள் பொது அவையில் செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் உலகத் தலைவர்கள் பற்றி ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற உள்ளது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது.
பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்படி, செப்டம்பர் 26-ம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது.
அடுத்த இரண்டு வாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என்றும், செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி 29 வரை பொது விவாதம் நடைபெறும். பொதுக் கூட்டத்தில் பேசும் முதல் உலகத் தலைவராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ உள்ளார். எனினும், பொதுக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் உரையாற்றும் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் மோடி எப்போது உரையாற்றுவார் என்பது உறுதியாகும்.