முகப்பு
இந்தியா

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற உறவினர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரியான சாலை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள்  5 கி.மீ வரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 11:56 AM
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற உறவினர்கள்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரியான சாலை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள்  5 கி.மீ வரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூரில் உள்ளது ஜப்லா கிராமம். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்தப் பகுதிமக்கள் நீண்ட நாட்களாக சிரமங்களைச் சந்தித்து வந்துள்ளனர். குறிப்பாக போதிய சாலை வசதிகள் இல்லாததால் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், பணியிடங்களுக்கு செல்ல மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி கிராமத்தில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரவச வலி வந்ததைத் தொடர்ந்து அவரின் உறவினர்கள் கிராமத்தின் ஓடை வழியாக அவரை கயிறு கட்டிய கட்டிலில் தூக்கிச்  சென்று சுமார் 5 கி.மீ தூரத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Advertisement

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் கர்ப்பிணியின் விடியோ  தற்போது இணையத்தில் அதிகம் பகிரபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.