இந்தியா

கேள்வி நேரத்தை தவிர்க்க கரோனா காரணம் காட்டப்படுகிறது: காங்கிரஸ்

DIN

கேள்வி நேரத்தை ரத்து செய்ய கரோனா வைரஸ் தொற்றை பாஜக அரசு ஒரு காரணமாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்வி கேட்க அனுமதியில்லை என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு கேள்வி கேட்க தடை விதிப்பதா என்று பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மகேஷ் தாப்சே, பல்வேறு நிலைகளில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தவிர்க்கும் வகையில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய கரோனாவை பாஜக அரசு காரணம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க ஏதுவாக மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT