முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 718 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தானில் சனிக்கிழமை காலை 10:30 மணி நிலவரப்படி 718 பேருக்குப் புதிதாக  கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
718 more COVID-19 cases reported in Rajasthan
பகிர்:

ராஜஸ்தானில் சனிக்கிழமை காலை 10:30 மணி நிலவரப்படி 718 பேருக்குப் புதிதாக  கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,515 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதன் மூலம், மாநிலத்தில் தற்போது மருத்துவமனையில் 15,409 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 71,990 இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,116ஐ எட்டியுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 86,432 பேர் புதிதாக கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பாதிப்பு 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.