கேரள நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக். இவருக்கு இன்று மாலை ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாமஸ் ஐசக்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது அலுவலக ஊழியர்களும் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆனால் அவர்களில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. அதேசமயம் அமைச்சருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சரின் அலுவலகம் கிருமி நாசினி கொண்டு நாளை சுத்தம் செய்யப்பட உள்ளது.
கேரள அமைச்சரவையில் அமைச்சர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.