இந்தியா

ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதி

DIN


கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சாரித் பிஎஸ், சந்தீப் நாயர் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் விய்யூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ்-க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக:

கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5-ஆம் தேதி சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அந்தத் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத் துறை, சுங்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT