முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 1,802 பேருக்கு கரோனா: மேலும் 9 பேர் பலி

தெலங்கானாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,802 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
Telangana adds 1,802 new COVID-19 cases; 9 deaths push toll to 895
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,802 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திங்கள்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 1,802 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,42,771 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 31,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,10,241-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் 47,594 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 895 ஆக அதிகரித்துள்ளது' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.