வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக விளக்கை அணைக்கும் போராட்டம்
வேலைவாய்ப்பின்மையால் அவதியுற்று வரும் இளைஞர்கள் அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக வீடுகளில் விளக்கை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அழைப்பு
வேலைவாய்ப்பின்மையால் அவதியுற்று வரும் இளைஞர்கள் அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக வீடுகளில் விளக்கை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் பல்துறையை சேர்ந்தவர்கள் வேலையிழந்துள்ளனர். இதில் அதிக அளவாக இளைஞர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.
இதனிடையே வேலைவாய்ப்பின்மையை கண்டித்து அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக இளைஞர்கள் தங்களது வீடுகளில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை அணைக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு விழுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக புரட்சி என்னும் விளக்கை ஏற்றும் வகையில் இளைஞர்கள் தங்களது வீடுகளில் விளக்கை அணைக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மையால் இருளில் தவித்து வரும் இளைஞர்கள் வீடுகளில் விளக்கை அணைத்து அரசுக்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக #9Baje9Minute, #NoMoreBJP என்ற ஹேஷ் டேக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திறமையான, கல்வி கற்ற பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி இருப்பது குறித்து அவர்களுக்காக ஆளும் அரசு எதனையும் செய்யாமல் உள்ளது என்றும், சமாஜ்வாதி கட்சியின் அனுராக் பதாரியா தெரிவித்துள்ளார்.