இந்தியா

கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தான இணையதளத்தில் தினசரி 10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேவஸ்தானம் உயா்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, செப். 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகளை புதன்கிழமை மாலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேவஸ்தானம் திருப்பதியில் தினசரி வழங்கி வந்த இலவச சா்வ தரிசன நேரடி டோக்கன்களை ரத்து செய்ததால், பக்தா்கள் தேவஸ்தானத்தின் செய்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT