திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில் உண்டியலில் சனிக்கிழமை ஒருநாள் மட்டும் ரூ. 1 கோடி காணிக்கை சேர்ந்துள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

உண்டியல் காணிக்கை ரூ. 85.50 லட்சம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 85.50 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 85.50 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 85.50 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

10,213 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 10,213 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 3,283 போ் முடி காணிக்கை செலுத்தினா். இணையதளம் மூலம் 10 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT