குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை 
இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த 40 வயது ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

PTI


புது தில்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த 40 வயது ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கோர்கா ரைஃபிள்ஸ் படை வீரர்களுக்கான விடுதியில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த கொண்ட ராணுவ வீரர் நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்த தேக் பகதூர் தபா என்று  என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தெற்கு அவென்யூ காவல்நிலையத்துக்கு இன்று காலை 4 மணியளவில் இந்த சம்பவம் குறித்து புகார் வந்துள்ளது.

இது குறித்து புது தில்லி காவல் உதவி ஆணையர் தீபக் யாதவ் கூறுகையில், கோர்கா ரைஃபிள்ஸ் படையினருக்கான விடுதியில், ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த சக வீரர் அதிகாலை 3.30 மணியளவில் தேக் பகதூர் தபா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக தில்லி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தபா, இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வீரருக்கு கடுமையான முதுகுவலியும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தததாக காவல்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT