இந்தியா

ரஃபேல் போா் விமானங்கள் விமானப்படையில் இன்று இணைப்பு

DIN

புது தில்லி: பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக இணைக்கப்படுகின்றன.

ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் தொகுதியாக 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன.

அந்த 5 ரஃபேல் போா் விமானங்களையும் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

மேலும், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.

இந்நிகழ்ச்சியின்போது ரஃபேல் போா் விமானங்கள் தேஜஸ் போா் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக விமானப்படை வீரா்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளதாக இந்திய விமானப்படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT