உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை
உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி டாக்ஸி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அப்தாப் ஆலம். இவர் தனியார் நிறுவன டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தில்லியிலிருந்து நொய்டா சென்ற அப்தாப் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அப்தாபின் மகன் முகமது சபீர் நொய்டாவில் கெளதம் புத்தாநகரில் உள்ள பதல்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது மதுபோதையில் இருந்த சிலர் தனது தந்தையை ஜெய்ஸ்ரீராம் கூறக் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி அழைப்பை காவல்துறையினரிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த சபீர் இதுகுறித்த உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத நோக்கத்துடன் கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள நொய்டா காவல்துறையினர் குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.